ஏழ்மையில் தமிழ் தந்தையின் பேத்தி - வீடு வழங்கிய அமைச்சர் கோவி.செழியன் | Thanjavur | Govi.Chezhiyan

Update: 2024-11-29 02:38 GMT

தஞ்சையில் வறுமையில் வாடும் மறைமலை அடிகளாரின் பேத்திக்கு, அமைச்சர் கோவி.செழியன் வீடு வழங்கினார். தமிழ் தந்தை என போற்றப்படுகிற மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பனின் மகளாகிய லலிதா, தனது கணவர் செந்தில்குமார் மற்றும் இரு குழந்தைகளுடன் தஞ்சாவூர் கீழவாசல் இரட்டை வார்க்கார தெரு பகுதியில் வசித்து வருகிறார். இவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 25ந் தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தார். அதில், வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், போதிய வருமானம் இல்லாததால் வாடகை செலுத்த முடியவில்லை என்றும், எனவே மகளிர் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி, லலிதாவுக்கு வல்லம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான சாவியை லலிதாவிடம், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்