கோவில் யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் - அறநிலையத்துறை போட்ட விதிகள்

Update: 2024-11-29 02:46 GMT

திருச்செந்தூரில் கோவில் யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் கோவில்கள், மடங்களில் உள்ள யானைகளை பராமரிக்க, அறநிலையத்துறை 39 விதிமுறைகளை அறிவுறுத்தி உள்ளது. அவற்றில் சிலவற்றை தற்போது பார்க்கலாம்...

யானைகளை உறுதியான மண் அல்லது புல் தரையில் நிறுத்தி வைக்கவும், காற்றோட்டத்துடன் கான்கிரீட் கொட்டகை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

யானையின் எடை, வயதுக்கு ஏற்ற உணவுகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் வழங்கவும்,

யானையின் கால், நகக்கண், தந்தங்களில் தோக்கா மல்லி எண்ணெய் விட்டு பராமரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் யானைக்கு வெப்பம் அதிகரிக்கும் போது, சங்கிலியால் கட்டி வைத்து, தேவையான உணவு தண்ணீரை அருகில் வைக்க வேண்டும் என்றும்,

வாரத்திற்கு 4 முறையும், கோடை காலத்தில் தினமும் யானையை குளிப்பாட்டவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு அல்லது பணத்திற்காக யாசகம் எடுக்க யானையை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ள அறநிலையத்துறை,

யானைக்கு தினமும் 10 கிலோமீட்டர் துாரத்திற்கு நடைபயிற்சி அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

முக்கியமாக மது அருந்தியவர்களை யானைக்கு அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அறநிலையத்துறை வலியுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்