5 நிமிடம் தாமதமாக வந்த பெண்கள்... பணித்தள பொறுப்பாளர் கொடுத்த Punishment - 4 பேருக்கு ஆதரவாக கைகோர்த்த 50 பெண்கள்
மதுரை திருமங்கலம் அருகே 100 நாள் வேலைக்கு 5 நிமிடம் தாமதமாக வந்த 4 பேரை பணித்தள பொறுப்பாளர் திருப்பி அனுப்பிய நிலையில், அவர்களுக்கு ஆதரவாக 50க்கும் மேற்பட்டோர் பணியைப் புறக்கணித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. எட்டுநாழி புதூர் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இன்று பணிக்கு வந்துள்ளனர். அப்போது 4 பேர் 5 நிமிடங்கள் கால தாமதமாக வந்த நிலையில், பணித்தள பொறுப்பாளர் அவர்களுக்கு இன்று பணி ஒதுக்க முடியாது என கூறியுள்ளார். 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்ததால் அவர்கள் தாமதமாகி விட்டது என கூறவே, அதை பொறுப்பாளர் ஏற்க மறுத்துள்ளார். இதனால் எட்டு நாழி - புதூர் கிராம மக்கள் வாக்குவாதம் செய்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டு பணியைப் புறக்கணிப்பதாகக் கூறி புறப்பட்டுச் சென்றனர்.