விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு செர்பியாவைச் சேர்ந்த நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார். மழையால் தடைபட்டு மீண்டும் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில் போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காஸூடன் ஜோகோவிச் மோதினார். இதில் வழக்கம்போல் சிறப்பாக ஆடிய ஜோகோவிச், 7-க்கு 6, 7-க்கு 6, 5-க்கு 7, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரர் ஆன்ட்ரே ரூப்லெவ் உடன் ஜோகோவிச் மோதுகிறார்.