"நடிகர் சரத்குமாருக்கு சாதாரண மருத்துவ பரிசோதனை" | Sarathkumar

Update: 2022-12-11 08:21 GMT

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சாதாரண பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றதாகவும், தற்போது பூரண நலத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நடிகர் சரத்குமாருக்கு சளி மற்றும் வயிறு பிரச்சினை ஏற்பட்டதால், அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதாகவும், பின்னர் பூரண நலத்துடன் சென்னை திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்