"சமண மதத்தில் தான் திருவள்ளுவர் பிறந்திருப்பாரோ?" - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
ஆசாபாசம் இல்லாத சமண மதத்தில், திருவள்ளுவர் பிறந்தவராக இருக்கலாம் என எண்ணுவதாக, அமைச்சர் எ.வ.வேலு பேசியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த திருமலை கிராமத்தில், ஜெயினர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், இவ்வாறு கூறினார். முன்னதாக ராஜராஜ சோழனின் சகோதரியும், சோழர்குலத்தின் இளவரசியுமான குந்தவை நாச்சியார் உருவ சிலை திறக்கப்பட்டது. பள்ளி கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் சேகர்பாபு கலந்து கொண்டனர். பின்னர் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, சமண கொள்கையும், திருக்குறளும் ஒரே அடிப்படையில் இருப்பதாக குறிப்பிட்டார்.