இனி நம்ம ஊருல ஆந்திரா உணவு சாப்பிடலாம்.. இந்தியாவில் 7வது கிளையாக சென்னையில்..! படத்தில் வருவது போன்ற பிரமாண்ட சிலை

Update: 2023-03-18 06:50 GMT
  • சென்னையில் பிரபல ஆந்திர பிரத்யேக உணவகமான, விவாகா போஜனாம்பு உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
  • முக்கிய சாலைகளில் ஒன்றான நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் சாலையில், ஆந்திராவின் பிரத்யேக உணவகமான, விவாகா போஜனாம்பு உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
  • மாயாபஜார் படத்தில் வருவது போன்று உணவகத்தின் முகப்பில் ரங்காராவ் கடோத்கஜன் சிலையும், உணவகம் முழுவதும் ஆந்திர பாரம்பரிய உணவுகளின் புகைப்படங்கள் கொண்டும் உருவாக்கப்பட்டு உள்ளது.
  • ஏற்கனவே இந்தியாவில் 6 கிளைகள் உள்ள நிலையில், ஏழாவதாக கிளையாக சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து தரப்பு சைவ அசைவ உணவு வகைகள், ஆந்திராவில் உள்ளது போன்ற ருசியுடன் மிக நேர்த்தியாக இங்கு தயாரிக்கப்படுகிறது.
  • திரைப்பட நடிகர் சந்தீப் கிஷன் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி உணவகத்தை தொடங்கி வைத்தார்.
  • இந்நிகழ்ச்சியில் உணவக உரிமையாளர் ரவிப்பிரகாஷ் நாயுடு, உணவு தயாரிப்பாளர் யாதகிரி, திரைப்பட இயக்குனர் விஜய் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்