நாய்களை கொல்ல கூலியா? சிக்கிய ஊராட்சி மன்ற தலைவர்

Update: 2022-12-06 15:47 GMT

விருதுநகர் மாவட்டம், சங்கரலிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி மற்றும் அவரது கணவர் மீது ப்ளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதில், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவரின் உத்தரவின் பேரில் சிலர் நாய்களை அடித்துக் கொன்று புதைப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் நாய்களை புதைத்த இடத்தில் சோதனை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட இடத்தில் அரசு கால்நடை மருத்துவர்கள் நாய்களின் சடலங்களை உடற்கூராய்வு செய்ததில், நாய்கள் அனைத்தும் கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்