புதுக்கோட்டை மாவட்டம் ஜெயமங்கலம் கிராமத்தில் எருதுகுட்டை பெருமாள் சாமி கோயில் திருவிழாவையொட்டி, மாடு மாலை தாண்டும் விழா நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி பாத பூஜை, எருது பூஜை, தேவராட்டம் உள்ளிட்டவை நடைபெற்ற பிறகு, மாடுகளை கோயிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொண்டு சென்று சிறப்பு பூஜை செய்து ஓட விடப்பட்டன.