மணல் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை...பெண் துணைத்தலைவருக்கு வந்த போன் கால்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள, கவுண்டன்யா ஆற்றில் சமூக விரோதிகள் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது

Update: 2022-12-25 12:39 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள, கவுண்டன்யா ஆற்றில் சமூக விரோதிகள் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது. குடியாத்தம் நகர்மன்ற பெண் துணைத்தலைவர் பூங்கொடி, மணல் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக கூறப்படும் கார்மேகம் என்பவர், பூங்கொடியை செல்போனில் தொடர்புகொண்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பூங்கொடி அளித்த புகாரின் பேரில், கார்மேகத்தை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்