"உங்க மக செத்துட்டா" என சொன்ன மாப்பிள்ளை..வீட்டிற்கு சென்று பார்த்த பெற்றோருக்கு அதிர்ச்சி

Update: 2022-12-01 07:30 GMT

வேலூரில் திருமணமான பெண் ஒருவரை கணவர் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தி கொலை செய்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பானது.

வேலூர் மாவட்டம் திருமணி அடுத்த உண்ணாமலை சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கும் உறவினரான ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் என்பவருக்கும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவரும், அவர்களுடைய பெற்றோரும் அடிக்கடி லட்சுமியை அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென லட்சுமி இறந்து விட்டதாக ராஜேஷ் தரப்பில் இருந்து வந்த தகவலால் லட்சுமியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். ராஜேஷின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர்கள் லட்சுமியின் உடலை அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த லட்சுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பின் மறியல் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்