அமெரிக்க நாடாளுமன்றத்தில் "வந்தே மாதரம்" கோஷம்..எழுந்து நின்று கை தட்டிய அமெரிக்க எம்.பி.க்கள்
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது, பாதுகாப்புத் துறையில் இந்தியாவும், அமெரிக்காவும் முக்கிய கூட்டாளிகளாக உருவாகி உள்ளன என்று கூறினார். விண்வெளி அறிவியல், செமி கண்டக்டர் உற்பத்தி, புத்தொழில் நிறுவனங்கள், தொழில்நுட்பம், வர்த்தகம், நிதி, கலை மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுகின்றன என்றும் அவர் கூறினார். இந்தியாவும், அமெரிக்காவும் அவரவர் மரபிலேயே ஜனநாயகப் பண்பை பெற்றுள்ளதால், ஜாதி, மதம், இனப் பாகுபாடு அடிப்படையிலான கேள்விகளுக்கு இடமில்லை என்றும் அவர் கூறினார். இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவை, முந்தைய தலைவர்கள் வலுப்படுத்தினார்கள் என்றும், நாங்கள் அதை உச்சகட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.