வானதி சீனிவாசன் பேச்சுக்கு சட்டபேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த பதில் | Senthil Balaji

Update: 2023-03-25 04:00 GMT
  • டாஸ்மாக் வருவாயில் தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் பின்தங்கி உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
  • சட்டப்பேரவையில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மதுபானம் வாங்குபவர்களின் ஆதார் இணைக்கப்பட வேண்டும் என்றும், டாஸ்மாக் மதுபான கடைகளில் யார் அதிகமாக மதுபானம் வாங்குகிறார்களோ அவர்களின் குடும்பத்தினருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
  • இதற்கு பதிலளித்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக ஆளும் மாநிலங்களிலின் டாஸ்மாக் வருவாயை தெரிந்துக் கொண்டு தமிழகத்தை பற்றி பேசலாம் என்றும் கூறினார்.
  • மேலும், தமிழகத்தின் நிர்வாகமே டாஸ்மாக் வருவாய் மூலம் தான் இயங்குவதாக உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் கூறினார்.
  • விற்பனை அதே அளவில் தான் உள்ளதாகவும், விலை உயர்த்தப்பட்டதால் வருவாய் உயர்ந்துள்ளது என்றும் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு டாஸ்மாக் வருவாயில் பின் தங்கி தான் உள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்