மகாராஷ்டிரா முதல்வர் பதவி யாருக்கு? டுவிஸ்ட் அடித்த அஜித் பவார் - ஷிண்டே தலையில் பேரிடி

Update: 2024-11-25 07:52 GMT

மகாராஷ்டிரா முதல்வர் பதவி யாருக்கு? டுவிஸ்ட் அடித்த அஜித் பவார் - ஷிண்டே தலையில் பேரிடி

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்று இன்று முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா தேர்தலில் BJP தலைமையிலான மஹாயுதி கூட்டணி 235 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி 49 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் என்சிபி அடங்கிய மஹாயுதி கூட்டணியின் இந்த வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த முதல்வர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏக்நாத் ஷிண்டேவை விட தேவேந்திர ஃபட்னாவிஸ் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது... ஷிண்டே மீண்டும் முதல்வராக வேண்டும் என்று சிவசேனாவினர் குரல் கொடுத்தாலும்,

தேவேந்திர ஃபட்னாவிசை முதல்வராக்குவதில் அஜித் பவாரும் ஆர்.எஸ்.எஸும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இன்று டெல்லியில் பாஜக தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்