அழிவை தேடி தந்த டிசம்பர் கடைசி.. கார்களில் உறைந்து சாகும் மக்கள் - வல்லரசு நாட்டையே உலுக்கிய கோரம்
8982
அமெரிக்காவில் பனிப்புயலில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள, பஃபல்லோ நகரிலிருந்து வெளியாகியிருக்கும் காட்சிகள் இது... பார்ப்போரை பிரமிப்பு அடைய செய்திருக்கும் பனிப்புயலில் நகரமே மூழ்கியிருக்கிறது.
பஃபல்லோவில் பனிப்பொழிவில் சிக்கிய கார்கள் எல்லாம் மீட்கப்பட்டு வருகிறது
8974
நகரம் பனிப்போர்வையால் போர்த்தப்பட்டதாக காட்சியளிக்கிறது
8993
அமெரிக்காவின் டென்னசியில் நீர்வீழ்ச்சி பனியால் உறைந்து காணப்பட்டது
9062
6 அடி உயரத்திற்கு கிடக்கும் பனிக்கட்டிகளை பெரும் சிரமத்துடன் மீட்பு குழுவினர் அகற்றி வருகின்றனர்.
8991
பனிப்பொழிவில் சிக்கிய கார்களில் இருந்து சடலங்கள் மீட்கப்படுவது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதஅமெரிக்காவில் நீடிக்கும் பனிப்புயலால் நியூயார்க் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு இடைவிடாமல் தொடர்வதால் வீடுகள், சாலைகள் பனியால் மூடி கிடக்கின்றன. இதற்கிடையே பனிப்பொழிவில் சிக்கிய கார்களில் இருந்து சடலங்கள் மீட்கப்படும் பரிதாபமும் ஏற்பட்டுள்ளது.
பஃபல்லோவில் 57 வயது முதியவர் காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், 22 வயது இளம்பெண்ணும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பிய இளம்பெண், பனிப்பொழிவில் சிக்கிய காரில் 18 மணி நேரங்கள் தவித்து உயிரிழந்து உள்ளார் என தெரியவந்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் நகரில் ஆங்காங்கே காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பனி மலையாக கொட்டிக் கிடப்பதால் அங்கு மீட்புப் பணியை முழு வீச்சில் தொடர முடியாத சூழல் நிலவுகிறது. அமெரிக்காவில் பனிப்புயலுக்கு 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.