ஆதரிக்காத இந்தியா - வரவேற்ற ரஷ்யா | Vladimir Putin | Modi | Ukraine | Russia | ThanthiTV
ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான ஜி 7 நாடுகளின் விலை வரம்பு நிர்ணயத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காத நிலையில், இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யா வரவேற்றுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை எதிர்க்க கடந்த 5ம் தேதி ஜி 7 மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு 60 டாலர் என விலை வரம்பை நிர்ணயித்தன. ஆனால் இதற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காத நிலையில், இந்தியாவின் முடிவை ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் வரவேற்றுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில், இந்தியாவிற்கு ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 16.35 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.