முதல்வரை கடுமையாக விமர்சித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Update: 2023-07-02 13:18 GMT

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதால் எந்தவொரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை என, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

பொது சிவில் சட்டத்திற்கு பல கட்சிகள் பா.ஜ.கவை ஆதரிக்கும் என்று நம்புவதாகவும், அனைத்து மக்களையும் ஒன்றிணைக்க சட்டம் இயற்றுவது காலத்தின் தேவை என்றும் பியூஷ் கோயல் குறிப்பிட்டார். ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசின் கொள்கைகளை மக்கள் விரும்பவில்லை என்றும், இம்முறை அரசை மாற்ற மக்கள் முடிவு செய்துள்ளதாகவும் பியூஷ் கோயல் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டணி ஊழல்வாதிகளின் கூட்டணி என்றும் விமர்சித்தார். மு.க.ஸ்டாலினால் தமிழகத்திற்கு வெளியே ஒரு ஓட்டுக் கூட தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும், அதேபோல், வங்கத்திற்கு வெளியே மம்தா பானர்ஜியால் ஒரு ஓட்டுக் கூட தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்