மாணவிக்கு ஓயாமல் லவ் டார்ச்சர்.. ஆசிரியரை கதற கதறவிட்ட கிராமம்-பாடம் புகட்டப்பட்டது..!
டியூசன் சென்ற மாணவியை காதலிக்கச் சொல்லி வற்புறுத்திய ஆசிரியரை, கிராம மக்கள் தோப்புக்கரணம் போட வைத்த சம்பவம் பீஹாரில் அரங்கேறி உள்ளது. மாணவி எவ்வளவோ மறுத்தும் அந்த ஆசிரியர் தொடர்ந்து தொல்லை தந்துள்ளார். ஒரு கட்டத்தில் மாணவி தனது பெற்றோரிடம் இதனைத் தெரிவித்து உள்ளார். மாணவியின் பெற்றோர் கிராம மக்களுடன் இணைந்து இது தொடர்பாக ஆசிரியரிடம் கேட்டு உள்ளனர். ஆனால், ஆசிரியர் மழுப்பலாக பதில் கூறிய நிலையில், கிராம மக்கள் ஆசிரியரை தோப்புக்கரணம் போட வைத்து, தக்க பாடம் புகட்டினர்.