இலங்கை நிலவரம் - ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி
இலங்கையில் 60 லட்சம் பேர் அடுத்த வேளை உணவுக்கு நிச்சயமற்ற சூழலில் உள்ளனர் என அந்நாட்டின் ஐ.நா. உலக உணவு அமைப்பு தெரிவித்து உள்ளது. இலங்கைக்கான ஐ.நா. வின் உலக உணவு அமைப்பு இயக்குனர் அப்துர் ரகீம் சித்திக் செய்தியாளர்களை சந்தித்தார்.
இலங்கையில் 60 லட்சம் பேர் அடுத்த வேளை உணவுக்கு நிச்சயமற்ற சூழலில் உள்ளனர் என அந்நாட்டின் ஐ.நா. உலக உணவு அமைப்பு தெரிவித்து உள்ளது. இலங்கைக்கான ஐ.நா. வின் உலக உணவு அமைப்பு இயக்குனர் அப்துர் ரகீம் சித்திக் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது நாட்டில் 63 லட்சம் பேருக்கு உணவு பாதுகாப்பின்மை உள்ளது என கூறியுள்ளார். சுதந்திரம் பெற்றதில் இருந்து இது வரை இல்லாத வகையில், இலங்கை பொருளாதாரம் ஆனது தற்போது உணவு நெருக்கடியில் சிக்கி மோசமடைந்து உள்ளதாக கூறினார். உணவு பாதுகாப்பு என்பது அனைத்து நேரங்களிலும் அனைத்து மக்களுக்கும் போதிய ஊட்டச்சத்து உணவு கிடைப்பது என்பதே என்றும் சித்திக் சுட்டி காட்டியுள்ளார். இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 53 லட்சம் பேர் தங்களது உணவின் அளவை குறைத்துள்ளதாக சித்திக் தெரிவித்தார்.