சென்னையில் திருநங்கைகளின் முப்பெரும் விழா, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ரம்யாகிருஷ்ணனுக்கு திருநங்கைகள் சார்பில் லேடி அல்டிமேட் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் அரசு சார்பில் திருநங்கைகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையின் பயன்கள் குறித்து, திருநங்கைகள் தான் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.