புதிய உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருவர் இன்று பதவியேற்பு

Update: 2023-05-19 03:14 GMT

ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஷ்ரா, மூத்த வழக்குரைஞர் கே.வி. விஸ்வநாதன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் 34 பேர் இருக்க வேண்டிய இடத்தில், ஏற்கெனவே இருவர் ஓய்வுபெற்றதாலும், ஜூலை மாதம் 4 பேர் ஓய்வுபெற இருப்பதாலும், நீதிபதிகளின் எண்ணிக்கை 28-ஆக குறையும். இதைக் கருத்தில் கொண்டு, ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஷ்ரா, மூத்த வழக்குரைஞர் கே.வி. விஸ்வநாதன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைக்கு மத்திய ஒப்புதல் அளித்த்தை அடுத்து, இருவரும் இன்று பதவி ஏற்கவுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.வி. விஸ்வநாதன், சட்டம் குறித்து ஆழ்ந்த புலமை உடையவர். இவர், வரும் 2030-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்று, 2031-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 வரை பதவியில் இருப்பார். பதஞ்சலி சாஸ்திரி, பி. சதாசிவம் ஆகியோரை தொடர்ந்து இந்த பெருமையை கே.வி.விஸ்வநாதன் பெறுவார்.

Tags:    

மேலும் செய்திகள்