பயணியிடம் செல்போன்,பணத்தை பறிக்க முயன்ற திருநங்கைகள்-தடுத்த காவலரிடம் தகாத வார்த்தைகளில் வாக்குவாதம்
கோவை, முதன்மை காவலரை தகாத வார்த்தைகளில் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்த 6 திருநங்கைகள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில், மணிகண்டன் என்ற பயணியிடம், செல்போன் மற்றும் பணத்தை, திருநங்கைகள் 6 பேர் பறிக்க முயன்றுள்ளனர். அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிங்காநல்லூர் முதன்மை காவலர் ரவிக்குமார், அவர்களிடம் மணிகண்டனை மீட்டுள்ளார். ஆனாலும், அந்த நபரை திருநங்கைகள் தாக்கியுள்ளனர். அதனை தடுக்க முற்பட்ட காவலரை, திருநங்கைகள் தகாத வார்த்தைகளில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.