வேலைக்கு சென்ற நபருக்கு நடந்த விபரீதம் தனியாக சென்றவர் மீது தாக்குதல்.. இறந்து கிடந்த ஆடு, மாடு ...
கன்னியாகுமரி மாவட்ட மலையோர கிராமங்களில் சிற்றார் சிலோன் காலனி பகுதியில் கடந்த 5-ம் தேதி புகுந்த புலி ஒன்று வீட்டில் வளர்த்த ஆட்டை கொன்றது. மறுநாள் ரப்பர் தோட்டத்தில் வேலைக்கு சென்ற தொழிலாளியை தாக்கியதோடு நாய் ஒன்றையும் தூக்கி சென்றிருந்தது. நேற்று முன்தினம் காலை மேய்ச்சலுக்காக சென்ற பசுமாட்டையும் புலி கடித்து கொன்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து 11 நாட்களாக புலியின் தாக்குதல் அதிகரித்து வருவதால் போர்க்கால அடிப்படையில் புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.