ஆறு வயது மகளுடன் போக்குவரத்தை கவனிக்கும் காவலர் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

Update: 2023-05-07 02:14 GMT

கோவையில் பள்ளி விடுமுறைக்கு வந்த மகளுடன் பெண் காவலர் ஒருவர், போக்குவரத்தை கவனிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த சிவசரண்யா, கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருகிறார். இவரது ஆறு வயது மகள் தந்தையுடன் பழனியில் வசித்து வருகிறார். கோடை விடுமுறைக்கு வந்த மகளை தான் பணியாற்றும் அவிநாசி சாலை சிக்னலுக்கு அழைத்துச் சென்று, தன்னுடன் வைத்துக் கொண்டு போக்குவரத்தை கவனித்து வருகிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்