அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல்... அதிரடி காட்டிய சென்னை போலீசார்

Update: 2023-04-28 12:21 GMT

சென்னை நீலாங்கரையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலை ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றினர். கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம், நீலாங்கரைப் பகுதிகளில் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு சாலை ஆக்கிரமிப்பு முக்கிய காரணமாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், 10க்கும் மேற்பட்ட போலீசார் நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம் ஆகிய பகுதிகளில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்