சுழற்றி சுழற்றி அடித்த சூறாவளி காற்று..பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்..

Update: 2023-05-28 10:36 GMT

சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர் செல்லும் சாலை தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக விளங்குகிறது. இச்சாலை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே பேருந்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் இன்று மதியம் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சூறாவளி காற்று காரணமாக ஆசனூர் அருகே சாலையோர வனப்பகுதியில் இருந்து மூங்கில் மரங்கள் முறிந்து தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்தது. இதன் காரணமாக சாலையில் வாகனங்கள் செல்ல முடியாததால் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பேருந்து கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்த பயணிகள் செல்ல முடியாமல் அவதிக்கு ஆளாகினர். இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களுக்கு உதவியாக பயணிகளும் சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்