கேரளாவில் இருந்து டன் கணக்கில் கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் - அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீசார்
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில், கேரளாவில் இருந்து 30 டன் மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன் பறிமுதல் செய்தார். அவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி ஓட்டுனரான திருவனந்தபுரத்தை சார்ந்த ஜோசன் ராஜ் என்பவரையும், கழிவுகளை கொட்டுவதற்கு இடம் பார்த்து கொடுக்கும் இடைத்தரகர் ஆறுமுகம் என்பவரையும் கைது செய்தனர். கேரளாவில் இருந்து ஆலங்குளம் பகுதியில் டன் கணக்கில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.