சென்னையில் பாதி விலைக்கு தக்காளி.. "விலை உயர்வு தமிழகத்தில் மட்டும் என்று கருத வேண்டாம்" அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி
சென்னையில், இன்று முதல் இரண்டு நடமாடும் வாகனங்கள் மூலம் தோட்டக்கலைத்துறை சார்பில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக செம்மொழிப்பூங்கா, மாதவரம் பகுதிகளில் தக்காளி விற்பனை செய்யப்படவுள்ளது. தக்காளி கிலோ 65 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தக்காளி விற்பனை செய்யப்படுவதாகவும் அதனை தொடர்ந்து சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.