ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டியில் சென்னை-பஞ்சாப் அணிகள் இன்று மோதவுள்ள நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின்போது சென்னை அணியின் கேப்டன் தோனி, பிரமாண்ட சிக்சர்களை அடுத்தடுத்து பறக்கவிட்டார். காயத்தில் இருந்து குணமடைந்து வரும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸூம் பயிற்சியில் பங்கேற்றார். மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்களும் தீவிரப் பயிற்சி மேற்கொண்டனர்.