கையில் பை.. ஆத்திரத்தில் பெண் எடுத்த முடிவு - திருப்பத்தூர் அருகே அதிர்ச்சி

Update: 2024-11-20 03:13 GMT

ஜோலார்பேட்டை அருகே போலி வாரிசு சான்றிதழ் கொடுத்து பத்திரப் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் முதல் மனைவியின் வாரிசுகளுக்குத் தெரியாமல், இரண்டாவது மனைவி சாமு என்பவர், போலி வாரிசு சான்று தயாரித்து 35 சென்ட் நிலத்தை தனது பெயரில் பத்திர பதிவு செய்ததாக தெரிகிறது. இதை ரத்து செய்யக் கோரி, முதல் மனைவியின் மகளான செல்வி, பலமுறை புகார் அளித்தும் முறையான பதில் கிடைக்கவில்லை. இதனால், கோபமடைந்த செல்வி, உறவினர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், போலீசார் பேச்சுவார்த்தை நடத்த வந்தபோது, திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி த*கொலைக்கு முயன்றுள்ளார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி, சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்