கம்யூனிச வீழ்ச்சியின் தொடக்கப்புள்ளியாக கருதப்படும் பெர்லின் சுவர் தகர்ப்பு நடத்தப்பட்ட தினம் இன்று.

Update: 2022-11-09 02:48 GMT

இரண்டாம் உலகப்போரின் முடிவில், அமெரிக்கா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் மற்றும் பிரிட்டன் இணைந்து, தோல்வி யுற்ற ஜெர்மனியை இரண்டாக பிரிக்க முடிவு செய்தன.

முதலாளித்துவ நாடுகள் ஜெர்மனியின் மேற்கு பகுதியையும், சோவியத் ஒன்றியம் கிழக்கு பகுதியையும் ஆக்கிரமித்தன. தலைநகர் பெர்லின் இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு பெர்லின், கிழக்கு ஜெர்மனியின் தலைநகரானது. மேற்கு பெர்லின், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது.

கிழக்கு ஜெர்மனி கம்யூனிச பாதையிலும், மேற்கு ஜெர்மனி முதலாளித்துவ பாதையிலும் சென்றன. அமெரிக்கா, சோவியத் ஒன்றியத்திற்கு இடையே பனிப்போர் தொடங்கியது.

இதன் முக்கிய களமாக இரண்டாக பிரிக்கப்பட்ட பெர்லின் நகரம் மாறியது.

முதலாளித்துவ ஜனனாயக பாதையில் சென்ற மேற்கு ஜெர்மனி அடுத்த சில வருடங்களில் அபார வளர்ச்சி பெற்று, பணக்கார நாடாக மாறியது. ஆனால் கம்யூனிச பாதையில் சென்ற கிழக்கு ஜெர்மனியில் பொருளாதார தேக்கமும், பற்றாகுறைகளும் அதிகரித்தன.

இதன் விளைவாக 1949 முதல் 1961 வரை, நல் வாய்ப்பு களை தேடி கிழக்கு ஜெர்மனியில் இருந்து மேற்கு ஜெர்மனி யில் பல லட்சம் ஜெர்மனியர்கள் தப்பிச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கிழக்கு பெர்லின் வழியாக மேற்கு பெர்லினுக்கு ரகசியமாக இடம் பெயர்ந்தனர்.

இவர்களை தடுக்க, 1961ல் பெர்லின் நகருக்கு நடுவே ஒரு உயரமான சுவரை கிழக்கு ஜெர்மனியின் கம்யூனிஸ்ட் அரசு எழுப்பியது. அதை தாண்டி செல்ல முயல்பவர்கள் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1980களில் சோவியத் ஒன்றியம் வலுவிழக்க தொடங்கியதால், கிழக்கு ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு கம்யூனிச நாடுகளில், கம்யூனிச ஆட்சிக்கு எதிரான இயக்கங்கள் வலுப்பெற்றன.

பொது மக்களின் எழுச்சியால், பெர்லின் சுவர் 1989ல் தகர்க்கப்பட்டது. 45 ஆண்டுகளாக பிரிக்கப்பட்டிருந்த ஜெர்மனியர்கள் மீண்டும் ஒன்றனைந்தனர். கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிச ஆட்சி தூக்கி எறியப்பட்டு, இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றினைந்தன.

உலக வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக கருதப்படும் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட தினம் 1989 நவம்பர் 9.

Tags:    

மேலும் செய்திகள்