Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-11-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-11-19 00:53 GMT

சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு...நவம்பர் 21ஆம் தேதி வரை வாய்ப்பளித்து தமிழக அரசு நடவடிக்கை...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 7ஆம் தேதி துவங்குகிறது....நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்...

மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்சார வாரியம் அறிவிப்பு...5 வீடுகள் இருந்தாலும் 100 யூனிட் மானிய மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்... 

ஆதாரை இணைப்பதால் மின் இணைப்பு மற்றும் மானியத்தை முறைப்படுத்த முடியும் என பொதுமக்கள் கருத்து...வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கும் 100 யூனிட் மானியம் கிடைக்க செய்யுமாறு கோரிக்கை...

விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்...ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு...

விரைவில் ஒரு தொகுதிக்கு இடைத் தேர்தல் வரும், அப்போது இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்...அதிமுக ஐடி பிரிவு முன்னாள் செயலாளர் ஆஸ்பயர் சுவாமிநாதன் கூறும் தகவலால் பரபரப்பு...

ஈ.பி.எஸ் மீண்டும் முதல்வராவதற்காக தர்காவில் சிறப்பு தொழுகை...அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பேட்டி..

முகவரி இல்லாத பலரை சேர்த்தால் மெகா கூட்டணி ஆகி விடாது...ஈ.பி.எஸ் அறிவித்த மெகா கூட்டணி குறித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சனம்...

Tags:    

மேலும் செய்திகள்