டிஎன்பிஎல் 2023... 'கில்லி' போல் சொல்லி அடித்த சாய் - திருப்பூரை பந்தாடிய கோவை
7வது சீசன் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதலாவது போட்டியில் கோவை அணி வெற்றி பெற்றது.
கோவையில் நடைபெற்ற இப்போட்டியில், திருப்பூர் அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக சாய் சுதர்சன் 86 ரன்கள் அடித்தார்.
பின்னர் விளையாடிய திருப்பூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கோவை அணி, முதல் ஆட்டத்திலேயே வெற்றியை பதிவு செய்துள்ளது.