திருச்செந்தூர் டாக்டர். சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2022-11-13 06:29 GMT

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது.

இந்தக் கல்லூரியின் 23-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சென்னை இன்போசிஸ் லிமிடெட் டெக்னாலஜி ஆர்க்கிடெக்ட் டாக்டர் ஏ.முகமது முனாவர் உசேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.

விழாவில் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வரவேற்று பேசி, ஆண்டறிக்கை வாசித்தார்.

இந்நிகழ்வில் 367 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்