சீனாவில் 10 லட்சம் பேரை காவு வாங்க போகும் புதிய கொரோனா - கவலையில் உலக சுகாதார அமைப்பு

Update: 2022-12-22 08:52 GMT

ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு சீனாவில் அதிவேகமாக கொரோனா பரவி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

தொடர் மக்கள் போராட்டங்களால் சீனாவில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டன. இதன் காரணமாக வரும் ஆண்டில் 10 லட்சம் பேர் வரை தொற்று பாதிப்பால் உயிரிழக்கக் கூடும் என ஆய்வறிக்கைகள் தெரிவித்தன. சீனாவின் நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ், "சூழலை சமாளிக்க சீனாவில் நோயின் தீவிரம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கான தேவைகள் பற்றிய விரிவான தகவல்கள் உலக சுகாதார அமைப்பிற்கு தேவை என சீனாவுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்