ராணுவத்தையே சுற்றிவளைத்த பெண்கள் படை.. வந்த வழியே திரும்பியதால் அதிர்ச்சி - மணிப்பூரில் பரபரப்பு

Update: 2023-06-25 08:40 GMT

மணிப்பூரில் பெண்கள் தலைமையிலான ஆயிரத்து 500 பேர் கொண்ட கும்பல் ராணுவத்தை சுற்றி வளைத்த நிலையில், கைது செய்யப்பட்ட கிளர்ச்சியாளர்கள் 12 பேர் விடுவிக்கப்பட்டனர்.


மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி பிரிவினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், பழங்குடியினர் பட்டியலில் இருக்கும் குகி இனத்தவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மே 3 பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்ட நிலையில் அப்போது வன்முறை வெடித்தது. தற்போது வரை பதற்றம் நீடித்து வரும் நிலையில், இம்பாலின் கிழக்குப் பகுதியில் உள்ள இதாம் கிராமத்தில் ஆயுதங்களுடன் கிளர்ச்சியாளர்கள் மறைந்து இருந்ததை அடுத்து ராணுவ வீரர்கள் ஆயுதங்களைக் கைப்பற்றி KYKL அமைப்பைச் சேர்ந்த 12 கிளர்ச்சியாளர்களைக் கைது செய்தனர். ராணுவத்திற்கு எதிராக பெண்கள் தலைமையிலான ஆயிரத்து 500 பேர் கொண்ட கும்பல் ராணுவத்தை முற்றுகையிட்ட நிலையில், மனிதாபிமான அடிப்படையில் கிளர்ச்சியாளர்களை விடுவித்தது ராணுவம். 2015-ம் ஆண்டு டோக்ரா யுனிட் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் இந்த குழுவில் இடம்பிடித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ராணுவம் வெளியேறியது.

Tags:    

மேலும் செய்திகள்