அடகுக் கடை ஓனர் வீட்டில் கொள்ளை...விரலால் சிக்கிய மூவர் - அதிர்ச்சி
சிவகங்கையில் நகை அடகுக்கடை உரிமையாளர் வீட்டில், வெள்ளி பொருட்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்த தங்கமணி என்பவர், மதுரையில் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஒக்கூரில் உள்ள பூட்டியிருந்த தனது வீட்டில் இருந்து மர்ம நபர்கள், 6 லட்ச ரூபாய் மதிப்பிலான 20 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களை திருடிச் சென்று விட்டதாக, மதகுபட்டி காவல் நிலையத்தில் தங்கமணி புகாரளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு தொடர்ந்த தனிப்படை போலீசார், விரல் ரேகை மற்றும் சிசிடிவி காட்சிகளின் மூலம் விசாரணை நடத்திய நிலையில், சார்லஸ், லட்சுமணன் மற்றும் மாதேஸ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9 கிலோ வெள்ளி கட்டிகள் மற்றும் 2 லட்ச ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.