நொடி பொழுதில் இளைஞர் வாழ்க்கையே போச்சு கண்மூடி திறப்பதற்குள் நசுங்கிய தலை - மிக மிக கவனம்

Update: 2024-11-25 05:04 GMT

நொடி பொழுதில் இளைஞர் வாழ்க்கையே போச்சு

கண்மூடி திறப்பதற்குள் நசுங்கிய தலை

தயவு செய்து இந்த விசயத்தில் மிக மிக கவனம்

லாரியை முந்தி செல்ல முயன்ற இளைஞர் தலை நசுங்கி, உயிரிழந்த சம்பவத்தில் கார் டிரைவர் போலீசில் சரணடந்துள்ளார்.. இது குறித்து பார்க்கலாம்..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தபோது தான், இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.. பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலத்தை சேர்ந்த வேளாங்கண்ணி. 24 வயதேயான, இவர் சொந்த வேலை காரணமாக, தனது பைக்கில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.

கருப்பத்தூர் அருகே சென்று கொண்டிருந்த அவர் முன்னால் சென்ற லாரியை முந்துவதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பின்னால் வேகமாக வந்த கார் மோதியது.

இதனால், பைக்கை கட்டுப்படுத்த முடியாமல், வேளாங்கண்ணி கீழே விழுந்ததில் கார் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த குளித்தலை போலீசார், உயிரிழந்த வேளாங்கண்ணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த சூழலில், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் தானாகவே, லாலாப்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

போலீசாரின் விசாரணையில், உயிரிழந்த வேளாங்கண்ணி, பெரம்பலூர் அருகே உள்ள அன்னமங்கலத்தில் வசிக்கும் செல்வராஜ்-தனபாக்கியம் தம்பதியினரின் மகன் என்பதும் இவர் திருமணம் ஆகாதவர் என்பதும், இவருக்கு 2 சகோதரிகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்