மேற்குவங்க மாநிலம் சத்திகர் ரயில் நிலையம் அருகே பர்தாமான் - பந்தேல் இடையிலான உள்ளூர் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், உயிர்ச்சேதம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.