இரவில் வீட்டில் தனியே இருந்த பெண்கள் அத்துமீறி- அசிங்கம் செய்த ஊழியர்கள்-அதிர்வுகளை கிளப்பும் வீடியோ

Update: 2024-11-18 10:31 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, மாதத் தவணை கட்டவில்லை எனக்கூறி, பெண் ஒருவரின் வீட்டிற்கு இரவில் வந்த நிதி நிறுவன ஊழியர்கள் அநாகரிமாக பேசி அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தனியார் நிறுவன ஊழியர்களின் இந்த அடாவடி பண வசூல் முறையும், அத்துமீறல் சம்பவமும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு காயக்கார தெருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

மோகனாம்பாள் என்பவர் தன் மாமியாருக்காக 67 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது..

தொடர்ந்து, மாதத்தவணையாக 3490 ரூபாயை அவர் கட்டி வந்த நிலையில், கடந்த மாத தவணையை மட்டும் குடும்ப சூழ்நிலையால் அவர் கட்டத் தவறியதாகவும் சொல்லப்படுகிறது..

இந்நிலையில், நிதி நிறுவனத்தின் கடன் வசூல் செய்யும் ஊழியர்கள், பெண்ணின் வீட்டிற்கு வந்து ஒருமையில் பேசி பணத்தை கட்டச் சொன்னதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...

மாதத் தவணையை திருப்பி செலுத்தாததால், இரவில் வந்து தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் இரு பெண்களை அநாகரிகமாக பேசி அத்துமீறிய இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நிதி நிறுவனத்தின் கலெக்க்ஷன் ஊழியர்களிடம் தொலைபேசி எண் மற்றும் முகவரியை வாங்கிக் கொண்ட நிலையில், ஆற்காடு காவல் நிலையத்திற்கு காலையில் விசாரணைக்கு வருமாறு அனுப்பி வைத்திருக்கின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்