உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சுற்றுலா பயணிகள் காணும் வகையில், ராட்சத மின்னொளியில் ஜொலிக்கம் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது தொடர் விடுமுறை காரணமாக, பெரிய கோவிலின் கட்டிடக்கலையை காண்பதற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ஆனால், இரவு நேரங்களில் ரம்மியமான விளக்குகள் சில நாட்களுக்கு மட்டுமே எரிகிறது. மற்ற நாட்களில் விளக்குகள் எரியாத காரணத்தினால், கோவிலின் கட்டிடக்கலையை சுற்றுலா பயணிகள் காண முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்...