மாணவி ஸ்ரீமதியின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி..காவல்துறையினர் அனுமதி மறுப்பு
கடலூர் மாவட்டம் வேப்பூரில் மாணவி ஸ்ரீமதியின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். அங்குள்ள கூட்ரோட்டில் மரக்கன்று வழங்குவதற்கு ஸ்ரீமதியின் பெற்றோர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், வேப்பூர் காவல் துறையினர் இதற்கு அனுமதி மறுத்து ஸ்ரீமதி பெற்றோருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். அதில், போக்குவரத்து நெரிசல் காரணமாக போதிய பாதுகாப்பு வழங்க இயலாத சூழல் ஏற்படும் என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்