மார்க்கெட்டில் எலுமிச்சைக்கு மவுசு கூடியது.. 8 மடங்கு உயர்ந்த விலை -ஒரு பழமே இவ்ளோவா..? | Lemon Rate
கோடை நெருங்கி விட்ட நிலையில் வெயிலின் தாக்கத்தால் தமிழகம் முழுவது எலுமிச்சை விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் எலுமிச்சை பழம் 8 மடங்கு விலை உயர்ந்து விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து எலுமிச்சை வரத்து பாதிக்குப் பாதியாகக் குறைந்தது, கடும் பனியால் எலுமிச்சை விளைச்சல் பாதிக்கப்பட்டது ஆகிவற்றால் விலை அதிகரித்துள்ளது. 1 மூட்டை ஆயிரத்து 800 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை 3 ஆயிரம் மூதல் 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. மேலும் எலுமிச்சை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.