சிறுபான்மையின கல்வி உதவித்தொகை நிறுத்தம்.. மத்திய அரசு முடிவுக்கு கட்சிகள் கண்டனம் | Scholarship

Update: 2022-12-01 12:29 GMT

பிரீமெட்ரிக் ஸ்காலர்ஷிப் எனப்படும் இந்த கல்வி உதவித் தொகையை நிறுத்துவதாக மத்திய அரசு திடீரென அறிவித் துள்ளது.

இனி 9ஆவது, 10ஆவது வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 1 முதல் 8 வகுப்புகள்வரை இலவச கல்வி வழங்கப்படுவதாலும், மத்திய சமூக நலன், பழங்குடியின மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் 9ஆவது,10ஆவது வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், அதே போல் சிறுபான்மையின மாணவர்களுக்கும் வழங்க முடிவெடுக் கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித் துள்ளது.

அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளாக சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

2021-2022 ஆம் கல்வியாண்டில், தமிழகத்தில், மாணவிகள் 2 லட்சத்து 34 ஆயிரத்து 931 பேருக்கும்,மாணவர்கள் 2 லட்சத்து 13 ஆயிரத்து 483 பேருக்கும் என மொத்தம் 4 லட்சத்து 48 ஆயிரத்து 414 பேருக்கு, 86 கோடியே 55 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

2020-2021 கல்வியாண்டில், மாணவர்கள் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 394 பேர், மாணவிகள் 2 லட்சத்து 2 ஆயிரத்து 955 பேர் என, மொத்தம் 3 லட்சத்து 81ஆயிரத்து 349 மாணவர் களுக்கு, 76 கோடியே 96 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏழை சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்தியதைக் கண்டித்து,

பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடுமையாக விமர்சித்துவருகின்றன. தொடர் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்