தோட்டத்தில் தூக்கில் தொங்கிய முதியவர் - விசாரணையில் வெளிவந்த உடன்பிறப்புகளின் நாடகம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது உறவினர்கள் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே சக்கிலியான் கொடையை சேர்ந்தவர் 55 வயதான விவசாயி கண்ணன். இவர் 2 நாட்களுக்கு முன்பு படுகாயங்களுடன் தூக்கில் தொங்கியவாறு தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில், சொத்து தகாராறு காரணமாக உறவினர்களே முதியவரை கொன்றதும், தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து, முதியவரின் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார், அவரது சகோதரர், சகோதரி மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 9 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர்.