"போர் நிறுத்தம்-னு வெளியான செய்தி பொய்..எவ்ளோ நாள் பாதுகாப்பா இருப்போம் தெரியல" பதற்றத்துடன் பேசிய சூடான் வாழும் தமிழர்கள்..!
- 3 வருடமாக சூடானில் வேலை பார்க்கிறேன் இப்போது நடப்பது போன்ற மிக மோசமான சூழலை சூடானில் பார்த்ததில்லை...
- கடந்த சனிக்கிழமை வேலைக்கு வந்தேன் இன்னும் வீடு திரும்பவில்லை,குடும்பத்தினரை பார்க்க முடியவில்லை....
- சூடான் தலைநகர் கார்டம் பகுதியில் குண்டு வெடிப்பு அதிகம் உள்ளதால் மின்சாரம், தண்ணீர் வசதி துண்டிக்கப்பட்டுள்ளது...
- எல்லாருடைய பாஸ்போர்ட் எண், உள்ளிட்ட தகவல்களை கேட்டுள்ளார்கள், குழு குழுவாக பிரிந்து ஒரு இடத்தில் கூட திட்டமிட்டுள்ளோம்....
- குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு இன்னும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது...
- ரம்ஜான் தினமான நேற்று ஒரு நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதும் குண்டு வெடிப்பு நடந்து கொண்டு தான் இருந்தது....
- 72 மணி நேரம் போர் நிறுத்தம் என்ற செய்தி உண்மை இல்லை..
- ராணுவ மோதல் தீவிரம் அடைந்துள்ள சூடானில் தவிக்கும் தமிழர்கள், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். அங்குள்ள நிலவரம் குறித்து தொலைபேசி மூலம் இணையும் சூடான் வாழ் தமிழர்களிடம் கேட்றிவோம்.........
- நிலைமை தீவிரமாக மோசமடைந்து வருகிறது
- உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை தேவைகள் இன்றி மக்கள் எங்கும் தவித்து வருகின்றனர்.
- நேற்று இரவு கார்ட்டூம் மற்றும் ஓம்டுர்மன் நகரங்களில் பலத்த குண்டுவெடிப்பு சத்தம் கேட்டது
- கிடைக்கக்கூடிய ஆதாரங்களுடன் தூதரகக் குழு எங்கள் குடிமக்கள் அனைவருடனும் தொடர்பில் உள்ளது மற்றும் GOI வெளியேற்றத்திற்குத் தயாராகி வருகிறது