விழுப்புரம் மாவட்டம் கோரலூர் கிராமத்தில் 3 தலைமுறைகளாக வசித்து வரும் இருளர் இன மக்கள் சாலை வசதி இல்லாததால் அவதிக்குள்ளாகியுள்ளனர். கும்பன் என்பவர் உயிரிழந்த நிலையில், அமரர் வாகனத்தை வீட்டின் அருகே கொண்டு செல்ல முடியாததால் சடலத்தை தோளில் சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இருளர் மூதாட்டி கம்சலா என்பவர் சாலை வசதி வேண்டி சேற்றில் இறங்கி ஒப்பாரி பாடல் பாடினர்.