வேண்டாம்.. வேண்டாம் என அத்தனை பேர் தடுத்தும் தண்ணீரை குடித்த அமைச்சர் - ஒரு நொடி அதிர்ந்துபோன ஊர்
சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரி, கடலூர் மாவட்டம் நரசிங்கமங்கலம் கிராமத்தில், அமைச்சர் கணேசனை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக, அமைச்சர் கணேசன் நரசிங்கமங்கலம் கிராமத்துக்கு சென்றார். இதையறிந்த பெண்கள், காலி குடங்களுடன் அமைச்சரின் காரை முற்றுகையிட்டனர். சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும், சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சர் கணேசன், பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என, உறுதி அளித்தார்.