வேலூரில் அடிபம்புடன் சேர்த்து கழிவு நீர் கால்வாய் அமைத்த விவகாரம்... ஒப்பந்ததாரர் கைது
வேலூரில் அடிபம்புடன் சேர்த்து கழிவு நீர் கால்வாய் அமைத்த விவகாரம் தொடர்பாக, உதவி ஆணையர் புகாரின் பேரில், ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.சத்துவாச்சாரிக்குட்பட்ட விஜயராகவபுபுரத்தில், தெருவோரம் இருந்த அடிபம்பை அகற்றாமல், கழிவு நீர் கால்வாய் தடுப்பு சுவர் கட்டப்பட்டது குறித்து செய்திகள் ஊடகங்களில் வெளியானது. அதனையடுத்து சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவதாக வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மாநகராட்சியின் 2 வது மண்டல உதவி ஆணையர் செந்தில்குமரன் அளித்த புகாரின் அடிப்படையில், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஒப்பந்ததாரர் சுரேந்தர் பாபுவை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில்,
அவ்வப்போது சாலையில் இருக்கும் பொருட்களை அகற்றாமல் அலட்சியமாக பணிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.