குதிரை பந்தைய ஓட்டாளி வெட்டிப்படுகொலை... முன்விரோதம் காரணமாக நடந்த படுபயங்கரம்
இந்நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று குழுமணி ரோட்டரி சாலையில் நடந்து சென்ற சண்முகத்தை 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வழி மறித்து வெட்ட முயற்சித்திருக்கிறது.அந்த தாக்குதலில் இருந்து தப்பி ஓடி இந்த காபி ஷாப்பில் புகுந்திருக்கிறார் சண்முகம். ஆனாலும் விடாமல் துரத்திய அந்த கும்பல் சண்முகத்தை காபி ஷாப்பில் வைத்து கொடுரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றிருக்கிறது.இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த உறையூர் போலீசார், குற்றவாளிகளை வலைவீசி தேடி இருக்கிறார்கள். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து தாராநல்லூர் பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் என்கிற மாஸ் ஹரி, உறையூர் பகுதியை சேர்ந்த நவீன் குமார், பாலக்கரை பகுதியை சேர்ந்த விஜி, மிளகு பாறை பகுதியை சேர்ந்த தாடி கோபால், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அபிஷேக் ஆகிய ஐந்து வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்திருக்கிறார்கள்.
அப்போது தான் கொலைக்கான காரணம் அம்பலமாகி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவெறும்பூர் பகுதியில் ஒரு குதிரை பந்தையம் நடந்திருக்கிறது.அந்த பந்தையத்தில் கலந்து கொண்ட சண்முகம், போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்றிருக்கிறார். அதே போட்டியில் கைது செய்யப்பட்ட 5 பேரும் தோல்வியை தழுவி உள்ளனர்.அனைவரின் தோல்விக்கும் காரணம் சண்முகம் தான் என நினைத்து போட்டி களத்திலேயே அவருடன் வாக்குவாதம் செய்து வம்பிழுத்திருக்கிறார்கள். அப்போது இரு தரப்புக்கும் கைகலப்பாகி சண்டை மூண்டிருக்கிறது.நாட்கள் பல கடந்தும் கைது செய்யப்பட்ட வாலிபர்களின் மனதில் இருந்த குரோதம் மட்டும் குறையாமல் இருந்துள்ளது. அந்த முன்விரோதத்தில் சண்முகத்தை தீர்த்து கட்ட திட்டம் தீட்டி ஓட ஓட வெட்டி கொலை செய்தது விசாரனையில் தெரிய வந்திருக்கிறது.கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் தொடர் விசாரனை நடத்தி வருகின்றனர். முழு விசாரனைக்கு பிறகே அனைத்து உண்மைகளும் வெளிவரும்.